சினிமா செய்திகள் நடிகர்

விஜய்க்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்தது எதனால்?

மார்ச் 1,2018 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில்லை என்று முடிவெடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 16ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளையும் மார்ச் 23 ஆம் தேதியோடு முடித்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தது.

இதனிடையே, இன்று சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மட்டும் சென்னை விக்டோரியா ஹாலில் நடந்துகொண்டிருந்தது.

இதனால், விஜய்க்கு மட்டும் விதிவிலக்கா? என்று வாட்ஸ்-அப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடந்தது?

இந்தப்படம் உள்ளிட்ட நான்கு படங்களுக்கு மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளித்தாகவும், அதில் விஜய் படமும், மூன்று சிறிய படங்களும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்தப் படங்களுக்கான செட் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தினால் முழு படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும். இல்லையென்றால் ஸ்டிரைக் முடியும் வரை அந்த செட்டை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தார்களாம்.

அந்த அனுமதியும் போராட்டத்திற்கான கமிட்டி அனுமதியுடன்தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

மார்ச் 23ம் தேதிக்குப் பிறகு யாருக்கும் சிறப்பு அனுமதி கிடையாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியாகச் சொல்லப்பட்டுவிட்டதாம்.

இந்த சிறப்பு அனுமதி விசயம் முன்பே தெரிந்திருந்தால் நாங்களும் படப்பிடிப்பு நடத்தியிருப்போம் என்று சிலர் எகிறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் விஷாலுக்குச் சிக்கல் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள்.

Related Posts