சினிமா செய்திகள்

விஜய் 66 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் ஏப்ரல் 6 அன்ரு தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.

ஏப்ரல் 6 அன்று அந்தப் படம் பூசையுடன் ஆரம்பமானது.அன்றே படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

இந்தப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி விஜய்க்காக முதன்முறையாக ஒரு புதிய கதையை புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளார் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பெயரை இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

அதன்படி விஜய்யின் 66 ஆவது படத்துக்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related Posts