September 18, 2020
சினிமா செய்திகள்

விஜய் 65 பட பாடல் பதிவு – இயக்குநர் நிம்மதி

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தமன் இசையமைக்கவிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

ஆனால், திரைக்கதை முழுவதையும் கேட்ட விஜய்க்கு திருப்தி என்பதால் படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாம்.

முதலில், தமன் இசையில் ஒரு பாடல் பதிவு நடந்திருக்கிறது. சில தினங்களுக்கு பதிவு செய்யப்பட்ட பாடல் விஜய்க்கும் முழுமையான திருப்தியாக அமைந்திருக்கிறதாம்.அதோடு அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் இந்தப்படத்தில் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதனால் இயக்குநர் தரப்பு மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறதாம்.

Related Posts