சினிமா செய்திகள்

விஜய் 64 பட ரிலீஸ் தேதி இதுதான் – புத்திசாலித்தனமான முடிவு

விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

2017 தீபாவளி நாளில் விஜய் நடித்த மெர்சல் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார், 2018 தீபாவளியன்று வெளியானது. இவ்வாண்டு தீபாவளிக்கு பிகில் வெளியானது. 

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தீபாவளி நாளில் படம் வெளியாவதால் பெரிய வசூல் பார்த்து வருகின்றன விஜய் படங்கள்.

விஜய் 64 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதால் இப்படம் 2020 ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகவுள்ளதாம்.

ஏப்ரல் வெளியீடு என்றாலும் பாதுகாப்பான தேதியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

விஜய் 64 படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவிருக்கிறதாம். அடுத்தநாள் புனிதவெள்ளி, அதன்பின் சனி ஞாயிறு ஏப்ரல் 13 திங்கள் ஈஸ்டர் பண்டிகை, ஏப்ரல் 14 செவ்வாய் சித்திரை முதல்நாள்.

எனவே வரிசையாக 5 விடுமுறை நாட்கள் உள்ளன.படம் வெளியாகும் முதல்நாளையும் சேர்த்தால் ஆறு நாட்கள் பெரிய வசூல் இருக்கும் என்பதால் இந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

Related Posts