சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தின் இயக்குநர் இவர்தான்

ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ்.

2017 இல் வெளியான அந்தப்படம் நல்ல வரவேறபையும் வசூலையும் பெற்றது.

அதன் காரணமாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி.

கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய்யிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

விஜய்யைச் சந்தித்த லோகேஷ் கனக்ராஜ், ஒரு திரைப்படத்துக்கான கதைக்கருவை விஜய்யிடம் சொன்னாராம்.

அது விஜய்க்குப் பிடித்திருந்ததாம். அதனால் இதை முழுநீளத் திரைக்கதையாக மாற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம் விஜய்.

இதனால் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ்தான் என்கிற பேச்சு பரவலாக இருக்கிறது.

Related Posts