சினிமா செய்திகள்

விஜய் 63 படத்தின் பெயர் இதுதான்?

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். இது விஜய்யின் 63 ஆவது படம் என்பதால் ‘தளபதி 63’ என்ற பெயரிலேயே படப் பிடிப்பை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும் விஜய் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி மாலை படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் வெளியிடவிருப்பதாகவும் சொல்கின்றனர். முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் தலைப்புகளும் இதே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்துக்கு வெறித்தனம், மைக்கேல் ஆகிய பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் படத்தின் பெயர் சி.எம் என்கிறார்கள். படத்தில் விஜய்யின் பெயர் க்ளமெண்ட் மைக்கேல் என்றும் அதன் சுருக்கமே சி.எம் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts