சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தைத் தயாரிக்கிறார் ஐசரிகணேஷ்

விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன.

விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம்.

இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோவும் பிரபல தயாரிப்பாளர் ஐசரிகணேஷும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்களாம்.

விஜய் 64 என்று கூறப்படும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது.

வித்தியாசமான கதைக்களம் என்பதால் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.

மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்குக் கிடைத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts