சினிமா செய்திகள்

வடசென்னையில் அமீர் ஆண்ட்ரியா காட்சிகள் நீக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அமீர் ஆண்டிரியா உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை.

இந்தப் படத்தில் வடசென்னை வாழ் மக்களையும் மீனவ மக்களையும் இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்களும் அதற்காகப் படக்குழுவினருக்குக் கண்டனங்களும் வந்தன.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், மீனவமக்களின் கோரிக்கையை ஏற்று ஓடும் படகில் நடக்கும் அமீர் ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.

அதோடு யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லையென்றும் அதைமீறி படத்தினால் யாருக்கேனும் மனவருத்தம் ஏற்பட்டிருக்குமானால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.

Related Posts