காணொளி வீடியோ

வெறித் தனம் பாடலுக்கு வரவேற்பு குறைவா?

தெறி, மெர்சல் படங்களைத்தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பிகில். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து உருவாகும் இந்த படத்தில், விஜய் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். படத்தில், கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது.

அப்போதிருந்து விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்தப் பாடல் காணொலி…..

இப்பாடல் காணொலிக்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறதென்று விஜய் ரசிகர்களும் வழக்கத்தை விட குறைவாக இருக்கிறதென்று மற்றவர்களும் கூறுகின்றனர்.

போகப்போக என்ன நடக்கிறதென பார்ப்போம்.

Related Posts