சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்?

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்தப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன என்றும் அவற்றை, தான் எழுதவிருப்பதாகவும் வைரமுத்து கூறியிருந்தார்.

பொன்னியின் செல்வன் படம் சம்பந்தமாக யாரும் வெளியில் பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாம்.

அதைமீறி வைரமுத்து பேட்டி கொடுத்துவிட்டார் என்பதால் மணிரத்னம் அவர் மீது கோபமாக இருக்கிறாராம்.

இதனால் வைரமுத்து வேண்டாம் என்கிற முடிவுக்கு படக்குழு வந்துவிட்டதென்கிறார்கள்.

இதுவரை படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்பது போலவே பாடலாசிரியர் குறித்தும் எவ்வித அறிவிப்பும் வரவில்லை. படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும்போது வைரமுத்து இல்லையென்பது தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts