விமர்சனம்

வடசென்னை – அமெரிக்காவிலிருந்து முதல்பார்வை

வட சென்னை – சுட சுட – வாசிங்டன்னில் இருந்து

முதலில் மிகப் பெரும் ஆச்சர்யத்தை சொல்லி விடுகிறேன். செவ்வாய் மாலை 8.00 முதல் காட்சி – அரங்கம் முழுக்க நிரம்பி வழிந்தது! என்னால் நம்பவே முடியவில்லை – அமெரிக்காவில் வேலை நாட்களில், அதுவும் செவ்வாய் அன்று! இயக்குநர் வெற்றி மாறன், வட சென்னை களம் என்ற காரணத்தாலும், சிலர் தனஷுக்காக வந்து இருப்பார்கள் போலும்!

இப்பொழுது கதைக்கு வருகிறேன். வட சென்னையில் வசிக்கும் தாதாக்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிகளாக நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் வெற்றி மாறன். படம் முழுக்க
துரோகமும், பழி வாங்கும் கதை களம்.

கேரம் போர்ட் நேஷனல் சாம்பியனாக வெற்றி பெற விரும்பும் அன்பு [தனுஷ்] – சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயில் வாழ்க்கை, மக்களுக்காகவும், ஊருக்காகவும் தாதாவாக மாறுகின்ற கதை.

அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல், ஆண்டிரியா, ஐஸ்வர்யா – எல்லோரும் வாழ்ந்து இருக்கிறார்கள் வட சென்னை மக்களாக.

ஆண்டிரியா, ஐய்வர்யா ராஜேஷ் – இருவரின் நடிப்பும் அட்டகாசம்!

கதை ரொம்ப நீளம், ஏகப்பட்ட கதா பாத்திரங்கள், ஜெயிலில் குழு சண்டை எல்லாம் கொஞ்சம் புரியவில்லை.

வடசென்னை தாதாக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்த கொள்ள இந்த படம் நிச்சயம் இது ஒரு ஆவணமாக இருக்கும்.

ஆனால் வெற்றி மாறனுக்கு இது வெற்றி படமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

வட சென்னை மக்கள் பற்றியும், அவர்களின் வாழ்வியல் முறை பற்றியும் பலரும் பலவிதமாக சொல்லுவார்கள் அதனை வெண் திரையில் பார்த்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

தனுஷ் இந்த படத்தில் அட்டகாசமாக நடித்து, தயாரித்தும் இருக்கிறார். ஆனால் இந்த படம் அவருக்கு பொருளாதர வெற்றியை தருமா என்பது மிகப் பெரும் சந்தேகமே!

மிகப் பெரும் எதிர்ப்பார்ப்புடன் சென்றேன், ஆனால் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.

– அமெரிக்காவிலிருந்து சிவகுமார்

Related Posts