December 8, 2019
சினிமா செய்திகள்

வடசென்னையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

தனுஷ் நடித்த வடசென்னை படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனுசை வைத்து ஆடுகளம், பொல்லாதவன் படங்களை எடுத்த வெற்றி மாறன் இயக்கி உள்ளார்.

வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி உள்ளது.

கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு உள்ளனர்.

முதல் பாகம் இன்று திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. இப்படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

வடசென்னை படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனராம்.

சில காட்சிகளை வெட்டி நீக்கியிருக்கிறார்கள். சில வசனங்கள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அவற்றை கேட்காதபடி செய்தனர். குறிப்பாக மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பற்றிய சர்ச்சைக் காட்சிகளை தணிக்கைக் குழுவினர் நீக்கி உள்ளனர். இதுபோல் தி.மு.க பற்றிய சர்ச்சை வசனத்தையும் நீக்கி விட்டு படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts