February 17, 2020
Uncategorized

சூர்யாவும் வெற்றிமாறனும் செய்வது தவறு – அதிரவைக்கும் குற்றச்சாட்டு

இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அண்மையில் அறிவித்தார்.

உடனே அதுகுறித்த சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.செந்தமிழரசு சுந்தரம் என்பவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவு…..

நடிகர், புரவலர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இவர்களின் அடுத்த படம் “வாடி வாசல்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தலைப்பில் “வாடிவாசல்” நாவலைத் தழுவி இயக்குனர் SP.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த S. புவி, என் தம்பி 2D நிறுவனத்திற்கு கதை – திரைக்கதை எழுதி 5 வருடங்களுக்கு முன்பு ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யாவிடம் கொடுத்தார்.

அவர்கள் கதை கேட்டு, படம் பண்ணலாம் என்று கூறி, கதையில் மாற்றம் வேண்டும் என்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அலைக்கழித்து, பின்னர் உங்கள் திரைக்கதை புத்தகம் தொலைந்து விட்டது சாதித்தார்கள்.

இந்த கதை முழுவதும் எனக்கு தெரியும், பிறகு அந்த திரைக்கதையின் ஒரு பகுதி தான் அமேசான் கிண்டலில் வெளியிடப்பட்ட அத்தான் நாவல்.

நடிகர் சூர்யா நேர்மையானவராக அடுத்தவரின் துன்பம் கண்டு இளகும் மனம் கொண்டவராக வெளியில் காட்டிக்கொள்வது எல்லாம் மிகை நடிப்பு என்பது எனக்கு 4 வருடங்கள் முன்பே தெரியும். கோடிகளில் சம்பளமாக வாங்கும் நடிகர் சூர்யா ஒரு புதிய இயக்குனரின் கதையை திருடி, ஏமாற்றி தான் வாழ வேண்டுமா?

சூர்யாவின் நேர்மை உடன் இருப்பவர்களுக்கும் அகரம் எவ்வாறு வாழை என்கிற அமைப்பில் இருந்து சுட்டு அதன் வடிவம் மாற்றப்பட்டு வாழையில் இருந்தவர்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டார்கள் என்பது பலருக்கு தெரியும், ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இந்த கதை திரைக்கதை திருட்டுக்கு உடன் படுவதும், அடிமை படுத்தப்படும் சனங்களை கண்டு இரங்கி, அரசியல் சினிமா எடுத்தது தன்னை ஒரு போராளியாக மார்தட்டி கொள்வதும் கேவலம்.

இந்த படத்தின் திரைக்கதை என் தம்பியிடம் bounded script ஆக உள்ளது. இதனை ரெஜிஸ்ட்டர் செய்தும் வைத்துள்ளார். டைட்டில் ஃபாண்டுகூட மாற்றாமல் ஒரு கதையை திருடுவது மகா அயோக்கியத்தனம்!.

மேலும் இந்த கதையை நடிகர் நாசர், நடிகர் சத்யராஜ் போன்றவர்களிடம் என் தம்பி சொல்லிருக்கிறார். அவர்கள் இதை உறுதி படுத்துவார்கள் என்றே எண்ணுகிறேன்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Related Posts