September 18, 2020
சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் முதல்பார்வை வெளியானது

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம்.

39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

காலையில் சூரரைப்போற்று படத்தின் ஒரு பாடல் முன்னோட்டம் வெளியானது, அதன்பின் இப்படத்தின் முதல்பார்வை வெளியானதால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்வுடன் இவற்றைப் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Posts