செய்திக் குறிப்புகள்

நாயகியின் துணிச்சல் முத்தம் – உதய் படத்தில் சுவாரசியம்

ஆர்ச்செர்ஸ் புரொடக்ஷன் சார்பில் உதய் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள
படம் உதய்.

கிடாவிருந்து எனும் படத்தை இயக்கிய தமிழ்ச்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மதராசபட்டினத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. நர்த்தகி, சும்மாவே ஆடுவோம், டோனி கபடிக்குழு, எந்த நேரத்திலும் ஏ.வி.எம்.-ன் அந்த நாள் போன்ற படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் கதாநாயகியாக நடித்த லீமா இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களோடு, ரஞ்சனி , காதல் சுகுமார், நெல்லை சிவா, அம்பானி சங்கர், தாரைதப்பட்டை காஞ்சனா, சேலம் தமிழ், செந்தில்குமார் , ரமேஷ், R. சேகர், LR.விஜய், ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஏ.எஸ்.ராஜ்.
இசை தீபக் ஹரிதாஸ்,
பாடல்கள்
செல்வராஜா, லட்சுமிபதி, சரண் நியாஸ்,
படத்தொகுப்பு காளிதாஸ்,
நடனம் ஸ்டைல் பாலா,
சண்டை ‘இந்தியன் பாஸ்கர்

இப்படம் பற்ரி இயக்குநர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது….

தான் வரைந்த ஓவியம் போல் தன் வாழ்க்கைக்கு மனைவி அமைய வேண்டும் என்று நினைக்கிறான் நாயகன், இடையில் எவ்வளவோ பெண்களைச் சந்திக்க நேர்ந்தாலும் யாரையும் விரும்பவில்லை. அந்த ஓவியம் போல் பெண் கிடைக்கவே தன் காதலை சொல்கிறான் நாயகன். அப்பெண் காதலை ஏற்றாளா? என்பதே கதை.

இதன் படப்பிடிப்பு சேலம், ஏற்காடு , ஹைதராபாத், ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்ற இடங்களில் 30 நாட்களில் இருகட்டப் படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

1) ஓவியப்பெண்ணே என் காதலை சுவாசிக்கும் கண்ணே ….. 2) இமைக்காத கண்கள் கொண்டு நானும் உனை பார்ப்பேனென்று…. 3) தனிமையின் வலி அது சிதைகின்ற நொடி கண்டு…ஆகிய மூன்று பாடல்களும் முணுமுணுக்க வைக்கும்.

மது அருந்துகின்ற பாரில் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது. இதில் நாயகனும் ஸ்டண்ட் கலைஞர்களும் சண்டையிடும் காட்சி எடுக்கும்பொழுது அங்கு மது போதையில் உள்ளவர்கள் எங்க கிட்ட வாங்கடா என்று வம்பிழுக்க அதை கண்டுக் கொள்ளாத நாயகனும் ஸ்டண்ட் கலைஞர்களும் மீண்டும் தன் வேலையை பார்த்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் வம்பிழுக்க நாயகியின் கையை பிடித்து இழுத்ததும் பொருக்காத நாயகன் போதை ஆசாமிகளை வெளுத்து வாங்கினார். ஓட ஓட விரட்டி அடித்தார்.

காதலை ஏற்காத தந்தை தப்பித்துச் செல்லும் காதல் ஜோடியை தன் அடியாட்களுடன் விரட்டிச் சென்று பிடித்து அவர்களை அடிக்கவே திமிறி எழுந்த நாயகனின் சண்டைக்காட்சி ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.

நாயகனும், நாயகி முத்தக்காட்சி எடுக்க நாயகன் தயங்கவே நாயகி திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

தற்போது படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகளில் இருக்கிறோம்.

இவ்வாறு இயக்குநர் கூறினார்.

Related Posts