September 18, 2020
சினிமா செய்திகள்

தனுஷ் 44 படத்தில் இரண்டு நாயகிகள்

தனுஷின் 40 ஆவது படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் பாக்கியிருக்கிறதாம்.

இதற்கடுத்து 42 ஆவது படத்தை செல்வராகவனும் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேனும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கடுத்து தனுஷின் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.இந்தப்படத்தை மித்ரன் ஜவகர் இயக்கவிருக்கிறார்.

மித்ரன் ஜவகர் ஏற்கெனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் தனுஷுக்கு இணையாக இரண்டு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்களாம். ஹன்சிகா மற்றும் நித்யாமேனன் ஆகியோரை இந்தப்படத்துக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

கொரோனா சிக்கல் முடிவடைந்ததும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts