சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் முதல்பார்வைக்குப் பெரும் வரவேற்பு

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்பார்வையில் விஜய்சேதுபதி நேராகவும் தலிகீழாகவும் இருக்கிறார். ஆனால் இருவரும் வெவ்வேறு வண்ணத்தில் சட்டை அணிந்திருப்பதால் மிகவும் கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

மணிவண்ணன் சத்யராஜ் கூட்டணியில் அமைந்த அமைதிப்படை போல் இந்த்ப்படமும் தற்கால அரசியலைக் கிழித்துத் தொங்கப்போடும் விதமாக அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கேற்ப முதல்பார்வையும் அமைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts