September 22, 2019
சினிமா செய்திகள்

கமலுக்கு வந்த திடீர் சோதனை – தலைவன் இருக்கிறானா?

கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது.

இப்படம் தொடங்கப் பல மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் சார்பில் கமல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தலைவன் இருக்கிறான் பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அந்தப்படத்துக்குச் செய்யும் செலவுக்கேற்ப வரவு இருக்காது என்று தணிக்கையாளர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த இரத்து முடிவை எடுத்ததாம் லைகா. 

இதை அறிந்த கமல் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.அதைத் தொடர்ந்து கமல் நிறுவனத்தின் சார்பில் சிலர் பலமுறை லைகாவிடம் பேசியும் லைகா பிடிவாதமாக இரத்து செய்யும் முடிவில் இருந்ததாம்.

கடைசியில் கமலே நேரடியாக லைகா நிறுவனர் சுபாஸ்கரனுடன் பேசி, என்னை நம்புங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று உறுதி கொடுத்திருக்கிறார். 

அதனால் இரத்து நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறதென்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அப்படம் தொடங்கினால்தான் நிஜம் என்றும் சொல்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும் என்றாலும் நெருப்பில்லாமல் புகையாதே.

Related Posts