September 22, 2019
Home Posts tagged Vijay
சினிமா செய்திகள்

பிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா? – சர்ச்சைப் பதிவு

பிகில் படத்தின் கதை என்னுடையது என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இது தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட நீண்ட செய்திக்குறிப்பின் ஒரு பகுதியில், வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின்
சினிமா செய்திகள்

பிகில் பாடல் விழா சொதப்பல்கள் – ரசிகர்கள் சாபம்

சென்னை அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய் நடித்த பிகில் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா செப்டம்பர் 19 மாலை நடந்தது. விழாவுக்குச் செல்லும் வழியெங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. மிகப்பெரிய வளாகம் என்றபோதும் சிறிது நேரத்தில் மகிழுந்து நிறுத்துமிடம் நிரம்பிவிட்டதெனச் சொல்லி வெளிக்கதவைப் பூட்டிவிட்டனர்.  இதனால், படத்தில் பணியாற்றியவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்
சினிமா செய்திகள்

நம் வெற்றியைத் தடுக்க ஒரு கூட்டமே வரும் – பிகில் விழாவில் விஜய் பேச்சு

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப்,
சினிமா செய்திகள்

பிகில் பாடல் விழா – தொழில்நுட்பக் கலைஞர்கள் கடும் அதிருப்தி

விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. அதில் விஜய் ரசிகர்களுக்கென்று சுமார் மூன்றாயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.  அதேசமயம் படத்தில் பணிபுரிந்த
சினிமா செய்திகள்

விஜய் வெளிநாட்டுப் பயணம் – பிகில் படக்குழுவின் கடைசி நேர பரபரப்பு

விஜய் நடிக்கும் பிகில் படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய், அப்படியே விமான நிலையம் சென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாராம். குடும்பத்துடன் பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தேதிகள்
சினிமா செய்திகள்

வரி செலுத்தாமல் வழக்கு தொடர்ந்த விஜய் தனுஷ் மற்றும் ஷங்கர் – ரசிகர்கள் விமர்சனம்

இயக்குநர் ஷங்கர், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற மகிழுந்தை இறக்குமதி செய்தார். இந்த மகிழுந்துக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.44 லட்சம் செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை ஆணையரிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்று கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறினார். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில்
சினிமா செய்திகள்

ரஜினிக்கு நன்றி சொன்ன நயன்தாரா படக்குழு

நடிகை நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக உள்ள 65 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “நெற்றிக்கண்” படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிலிண்ட் ராவ் இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று
சினிமா செய்திகள்

பிகில் பட ரிலீஸ் – கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் படத்தை இரண்டு நாட்கள் முன்னதாக வெள்ளிக் கிழமையே வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.  இப்போது அதில் ஒரு மாற்றம் நடந்திருக்கிறதாம். இன்னும் ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமையே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

கடிதத்தைக் கிழித்துப் போட்ட கலாநிதிமாறன் – சன் பிக்சர்ஸ் பரபரப்பு

ரஜினியின் எந்திரன், விஜய்யின் சர்கார் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்து,தமிழகத்தின் முக்கியமான திரைப்படத் நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தொடங்கிய நேரத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தவர் சக்சேனா.
சினிமா செய்திகள்

விஜய் படம் குறித்து வந்த செய்தியில் உண்மையில்லை – இயக்குநர் விளக்கம்

விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதற்குப் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன. இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய