Home Posts tagged Film Review
விமர்சனம்

கடமையைச் செய் – திரைப்பட விமர்சனம்

கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழகான மனைவி யாஷிகா ஆனந்த். ஓர் அன்பான குழந்தை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு வேலை இழப்பு.  அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக்
விமர்சனம்

லால்சிங்சத்தா – திரைப்பட விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அப்பா இல்லாமல் அம்மாவின் வளர்ப்பில் வளரும் லால்சிங்சத்தா என்கிற சாதாரண இளைஞனின் கதையைச் சொல்லி அதனூடே இந்திய ஒன்றிய அரசியலையும் தம் விருப்பத்துக்கேற்ற வகையில் இக்காலத்தவர்க்குச் சொல்லியிருக்கும் படம் லால்சிங்சத்தா. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் எழுதிச் செல்கின்றது ஒரு பறவையின் வாழ்வை எனும் அழியாப் புகழ்பெற்ற
விமர்சனம்

வட்டகரா – திரைப்பட விமர்சனம்

பெரும் தொழிலதிபர் அங்காடித் தெரு மகேஷ், மெக்கானிக் சதீஷ் சுப்பிரமணியம்,வாடகை மகிழுந்து ஓட்டுநர் சாரணேஷ்குமார், பாசமிகு தாத்தா கண்ணன் மாதவன் ஆகிய நால்வரும் எதிர்பாராமல் ஒன்றிணைகிறார்கள்.  நால்வருக்கும் ஆளுக்கொரு கதை இருக்கிறது. அதன்படி அவர்களுக்குப் பெரும் தொகை தேவை.  இதற்காகக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதுதான் வட்டகரா படம்.
விமர்சனம்

சீதா ராமம் – திரைப்பட விமர்சனம்

1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார். அதனால் நாடெங்கும் புகழ்பெறுகிறார். அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான
விமர்சனம்

பொய்க்கால் குதிரை – திரைப்பட விமர்சனம்

பிரபுதேவா மனைவியை இழந்துவிட்டு மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதல் அவருடைய மகள் மட்டுமே. அந்த மகளுக்கு ஒரு வித்தியாசமான நோய். அதைச் சரிசெய்யப் பெரும் தொகை தேவைப்படுகிறது.  அதற்காக பெரும் ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேலையைச் செய்து பணம் திரட்டி மகளைக் காப்பாற்ற நினைக்கிறார்.  அவர் நினைத்தபடி நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லும்
விமர்சனம்

எண்ணித்துணிக – திரைப்பட விமர்சனம்

ஜெய்யும் அதுல்யாவும் காதலர்கள்.  திருமணம் செய்ய இருவீட்டாரின் சம்மதமும் கிடைக்கிறது. திருமணத்துக்காக நகை வாங்கப் போகுமிடத்தில் அந்த நகைக்கடையைக் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் வருகிறது. அந்தக்கூட்டத்தால் துப்பாக்கியால் சுடப்படுகிறார் அதுல்யா.  அவர் என்னாவாகிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச்சொல்லியிருக்கும் படம்தான் எண்ணித்துணிக. மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு
விமர்சனம்

குலு குலு – திரைப்பட விமர்சனம்

அமேசான் மழைக்காட்டில் பிறந்து பலமொழிகளைக் கற்று பல்வேறு நாடுகளைக் கடந்து சென்னை வந்து வசிக்கிறார் சந்தானம். கூகுள் என்று பெயர், குல்லுபாய் என்றழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அவருக்கு உதவி என்று யாராவது கேட்டால் உடனே ஓடிப்போய் செய்யும் பழக்கம்.அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர்
விமர்சனம்

தி லெஜண்ட் – திரைப்பட விமர்சனம்

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தருகிற மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்துநிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள்.  அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்ல நினைத்திருக்கும் படம் தி லெஜண்ட். அறிமுக நாயகனாக
விமர்சனம்

மஹா – திரைப்பட விமர்சனம்

நல்ல வேலை,நீச்சல்குளத்துடன் கூடிய மிகப்பெரிய வீடு மகிழுந்து உள்ளிட்ட வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹன்சிகாவும் அவருடைய மகள் மானஸ்வியும் தனியாக வசித்துவருகிறார்கள். ஒருநாள் ஹன்சிகாவின் மகள் மானஸ்வி கடத்தப்படுகிறார். கடத்தல்காரன் பணம் கேட்டு மிரட்டுகிறான். காவல்துறை உதவியுடன் மகளை மீட்கப் போராடுகிறார் ஹன்சிகா. அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மஹா. படத்தில்
Uncategorized விமர்சனம்

தேஜாவு – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற