November 25, 2020
சினிமா செய்திகள்

சூர்யா கொடுத்த திடீர் பரிசு ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று.

நேரடியாக இணையதளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் இந்தப் படத்தைத் தயாரித்த சூர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

தயாரிப்பாளராக பெரிய இலாபம் சம்பாதித்ததோடு படம் வெளியான பின்பு அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சிதாம் சூர்யாவுக்கு.

இந்தப்படத்தில் நல்ல இலாபம் கிடைத்ததால் ஏற்கெனவே ஐந்து கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார் சூர்யா.

இப்போது படம் வெளியான பின்பு அதற்குக் கிடைக்கும் வரவேற்பில் மகிழ்ந்த சூர்யா, அதைப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம்.

சூரரைப்போற்று படத்தைக்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றதோடு பின்னணி இசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப்படத்துக்காக சுமார் ஒரு கோடி சம்பளம் பெற்றிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

படம் வெளியான பின்பு ஜி.வி.பிரகாஷுக்கு எதிர்பாராத பெரும் தொகையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் சூர்யா.

இந்தத் தகவலைத் தம் நண்பர்களிடம் உற்சாகமாப் பகிர்ந்து கொண்டாராம் ஜி.வி.பிரகாஷ்.

தொகை எவ்வளவு என்று விசாரித்தால், முப்பது இலட்சம் என்று சொல்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

Related Posts