சினிமா செய்திகள்

சூர்யாவா? ரஜினியா? இயக்குநர் சிவா முடிவு என்ன?

ரஜினியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. இயக்குநர் யார்? என்கிற குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 39 படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தை சிவா தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டதாம்.

சூர்யா படம் என்று அறிவித்தபின் இந்த மாற்றம் எப்படி நடந்தது? 

சூர்யா படம் முடிவான பின்பு ரஜினியைச் சந்திக்கும் வாய்ப்பு சிவாவுக்குக் கிடைத்திருக்கிறது.அவர் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்தவுடன் முதலில் ரஜினி படம் என்கிற முடிவுக்கு சிவா வந்துவிட்டாராம்.

அதன்பின், சூர்யாவிடம் சென்று ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. எனவே அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 

ரஜினியும் சூர்யாவிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. எனவே சூர்யா சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

இதனால் சிறுத்தை சிவா முதலில் ரஜினி படத்தை இயக்கப் போகிறார், அதற்கடுத்து சூர்யா படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.   

Related Posts