சினிமா செய்திகள்

சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்

இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.
இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்குக்காரர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் சூர்யா, இப்போது அவர் நடித்த படத்தையும் இணையத்தில் வெளியிடுவாரா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இணைய நிறுவனத்தினர், வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் ஒரு பெரிய படத்தை வாங்கி வெளியிடவேண்டும் என்பதற்காக சூரரைப்போற்று படத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

அதற்காக சுமார் ஐம்பது கோடி வரை கொடுக்கவும் அவர்கள் தயாராகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொகை சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அந்தப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறதெனச் சொல்லுகிறார்கள்.

படக்குழு எதிர்பார்க்கிற தொகையை இணைய நிறுவனம் கொடுத்தால் நேரடியாக இணையத்தில் படம் வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இன்று படத்தின் இயக்குநர் சுதாகொங்கராவின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட நிறுவனமோ அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னதோடு முடித்துக்கொண்டது.

இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், சூரரைப் போற்று அப்டேட் எங்கே? என்று கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

Related Posts