November 25, 2020
சினிமா செய்திகள்

சூர்யா அருண்விஜய் கூட்டணி – சுவாரசிய நடிகர்கள் பட்டியல்

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதியபடம் உருவாகவிருக்கிறது.
அப்படத்தை புது இயக்குநர் சரவணன் என்பவர் இயக்கவுள்ளார். 

இந்தப்படம் விலங்குகள் மீது அன்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் ஆறு வயதுச் சிறுவன் வேடம் ஒன்று முதன்மையாக அமைந்திருக்கிறதாம்.

அந்தச் சிறுவன் வேடத்தில் சூர்யாவின் மகன் தேவ் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதை உடனடியாக மறுத்துவிட்டார்கள்.

இப்போது அந்தப்படத்துக்காக உறுதி செய்யப்பட்டிருக்கும் நடிகர்கள் பட்டியல் ஆச்சரியமூட்டுவதாக அமைந்திருக்கிறது.

இந்தப்படத்தில் நடிகர் விஜயகுமார் அவர் மகன் அருண்விஜய் ஆகியோரோடு அருண்விஜய்யின் சிறுவயது மகனும் நடிக்கவிருக்கிறாராம்.

படத்திலும் தாத்தா,அப்பா,பேரன் என்கிற உறவுமுறையிலேயே கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.
 
சூர்யா தயாரிக்கும் படத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கும் படத்தில் அமைந்துள்ள நடிகர்கள் பட்டியலும் சுவாரசியமாக அமைந்திருப்பதால் மிகவும் பேசப்படக்கூடிய படமாக இது இருக்கும் என நம்பலாம்.
 

Related Posts