November 25, 2020
சினிமா செய்திகள்

சூர்யாவின் 40 ஆவது படம் – இரண்டாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம்.

சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சூர்யாவின் 40 ஆவது படமாக அறிவிப்பு வெளியாகியிருந்த படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இப்போது இவற்றை முந்திக் கொண்டு இன்னொரு படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் சூர்யா 40 என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து ஏற்கெனவே சூர்யா 40 என்று சொல்லப்பட்டிருந்த வாடிவாசல் சூர்யா 39 ஆகிவிட்டதெனப் புரிந்து கொள்ளலாம்.

Related Posts