சினிமா செய்திகள்

சூர்யா பாண்டிராஜ் படம் தாமதமாவது ஏன்?

சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் மூன்று. ஒன்று ஹரி இயக்கத்தில் அருவா. அப்படம் நடக்கவில்லை.

இரண்டாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல். அப்படத்தின் படப்பிடிப்பும் எப்போது என்று சொல்லப்படவில்லை.

அதன்பின் அறிவிக்கப்பட்ட படம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம்.
அப்படம் பற்றிய அறிவிப்பு 2020 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் ஆனபின்பும் அதன் படப்பிடிப்பு எப்போது என்று சொல்லப்படாமல் இருக்கிறது.

என்ன காரணம்? 

பாண்டிராஜ் இயக்கும் படத்தின் அறிவிப்புக்கு முன்பாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் சூர்யா.
 
த.செ.ஞானவேல் இயக்கும் எலிவேட்டை என்கிற படத்தில் அவர் கெளரவத் தோற்றத்தில் நடிப்பதாக இருந்தது.
 
சுமார் ஒருவாரம் மட்டும் சூர்யா நடிப்பதாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் போகப்போக அவருடைய வேடத்தை அதிகப்படுத்தி சுமார் ஒரு மாதம் வரை அவர் நடிக்கிற மாதிரி செய்துவிட்டார்களாம். 

அந்தப்படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டிருக்கிறாராம் சூர்யா. அதை முழுமையாக முடித்துவிட்டு பாண்டிராஜ் படத்தைத் தொடங்கலாம் என்று சூர்யா சொல்லியிருப்பதால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று சொல்கிறார்கள்.

Related Posts