சினிமா செய்திகள்

ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் விஷால் படப்பெயர்

மத கஜ ராஜா, ‘ஆம்பள’ஆகிய இரண்டு படங்களில் இணைந்திருந்த சுந்தர் சி விஷால் ஆகியோர், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

மூன்றாவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ள இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

துருக்கியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. முக்கியமான காட்சிகளை அங்கு படம்பிடித்துள்ளனர்.

துருக்கி படப்பிடிப்பில், நான்கு சக்கரங்களைக் கொண்ட பைக்கில் விஷால் செல்வதாகக் காட்சி. இதைப் படமாக்கும்போது பைக்கிலிருந்து விஷால் தூக்கி எறியப்பட்டார். எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவத்தால் மொத்தப் படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது.

விஷாலுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. விஷால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பான சண்டைக் காட்சிகளைக் கொண்ட இப்படத்துக்கு ஆக்‌ஷன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம். தமிழ் தெலுங்கு மட்டுமின்றி இந்தி வியாபாரத்தையும் கணக்கில் கொண்டு இப்பெயர் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

விஷாலின் ஆக்‌ஷன் என்றால் அவருடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

Related Posts