September 18, 2020
சினிமா செய்திகள்

சுந்தர்.சி படம் தீபாவளி வெளியீடு – அதிரடி முடிவு

சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை. அதனால் பெரிய வெற்றி பெற்றது அந்தப்படம்.

அதைத் தமிழில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி. அவர் தயாரிக்க பத்ரி இயக்குகிறார்.யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியிடவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.நவம்பரில் வரவிருக்கும் தீபாவளி நாளில் இந்தப்படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதற்கேற்ப படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் புதிய படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சிக்கு கொரோனாவால் பல மாதங்கள் படங்கள் எதுவும் வெளியாகாததால் புதிய படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததையும் திரையரங்குகளில் வெளியிடும் முன் ஒளிபரப்பவியலாது எனும் நிலை.

அதனால் அவர்களே ஒரு புதிய படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார்களாம்.

Related Posts