Uncategorized

சுகாசினி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மீன்உம் தொடங்கப் பல மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால், அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கிறார்.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் எனப்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் இயக்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இவற்றில் ஒரு படத்தை சுகாசினி இயக்குகிறார். அவர் இயக்கும் குறும்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாம்.

நாயகியை மையப்படுத்திய கதை என்பதால் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டாராம். சுகாசினி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் குறும்படத்தின் படப்பிடிப்பு இப்போது மிகவும் எளிய முறையில் நடந்து கொண்டிருக்கிறதாம்.

Related Posts