September 18, 2020
சினிமா செய்திகள்

சூரரைப் போற்று வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – திரையுலகில் பரபரப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.
இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருந்தன.

ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்குக்காரர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் சூர்யா, இப்போது அவர் நடித்த படத்தையும் இணையத்தில் வெளியிடுவாரா? என்கிற கேள்வியும் இருந்தது.

இந்நிலையில், அமேசான் இணைய நிறுவனத்தினர், வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் ஒரு பெரிய படத்தை வாங்கி வெளியிடவேண்டும் என்பதற்காக சூரரைப்போற்று படத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதற்காக சுமார் ஐம்பது கோடி வரை கொடுக்கவும் அவர்கள் தயாராகவிருப்பதாகச் சொல்லப்பட்டது.
தொகை சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அந்தப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறதெனச் சொல்லப்பட்டது.

படக்குழு எதிர்பார்க்கிற தொகையை இணைய நிறுவனம் கொடுத்தால் நேரடியாக இணையத்தில் படம் வெளியாகலாம் என்று சொன்னார்கள்.

இந்நிலையில் இன்று சூரரைப் போற்று படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடவிருக்கிறோம் என்றும் அக்டோபர் 30 ஆம் தேதி அப்படம் இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts