சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் படப்பெயர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது, இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களோடு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இம்மூன்றில் கடைசியாகத் தொடங்கப்பட்ட இப்படம் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 12) காலை 11 மணிக்கு இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியிடப்பட்டது.

அதில், படத்தின் பெயர் நம்ம வீட்டுப் பிள்ளை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு செப்டம்பர் கொண்டாட்டம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

படத்தின் பெயர் நம்ம வீட்டுப் பிள்ளை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

Related Posts