October 29, 2020
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த விவரங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்கிறார்கள்.

இவற்றிற்கு அடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார்? என்கிற அறிவிப்பு இதுவரை வரவில்லை.அதேசமயம், இவ்விரு படங்களைத் தொடர்ந்து அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அசோக் என்பவரது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுதவிர, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்விரு படங்கள் தவிர,அட்லியிடம் பணியாற்றிய இன்னொரு உதவியாளர் சிபிச் சக்கரவர்த்தியும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இவர் சொன்ன கதை பிடித்த காரணத்தால் இவர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

ஆக, அடுத்தடுத்து மூன்று இயக்குநர்களின் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார் என்றும் இப்படங்களைத் தயாரிக்கப் போவது யார்? என்கிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts