சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாடு பயணம் – எதற்கு?

நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுபற்றிய விவரம்….

சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை ரவிக்குமார், இரும்புத்திரை மித்ரன், பாண்டிராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்று படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றோடு அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இப்படம் ஜூன் 14 அன்று வெளியாகவிருக்கிறது. அதனால் அப்படம் தொடர்பான வேலைகளிலும் கவனம் செலுத்திவந்தார் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து இடைவிடாத பணிகள். இதனால் சில நாட்கள் ஓய்வுக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருக்கிறாராம்.

அவர் இலண்டன் செல்லவிருப்பதாகத் தெரிகிறது. ஓய்வுக்கான பயணத்தோடு இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியையும் அவர் பார்க்கவிருக்கிறார் என்கிறார்கள்.

ஜூன் 16 அன்று நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. அந்தப் போட்டியை நேரில் காணவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Related Posts