சினிமா செய்திகள்

மோடியின் அறிவிப்புகளால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் ஏன்?

கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல. 

கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை  இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது.

கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான சீமராஜா படத்தில் அவர் பெச்சும் ஒரு வசனம் வேகமாகப் பரவிவருகிறது. 

அந்த வசனம், நீ யாரா வேணாலும் இரு எவ்வளவு பெரிய ஆளாவேணாலும் இரு ஆனா எங்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே நில்லு எனும் வசனம்.

தனிமைப்படுத்திக் கொள்ளுதலுக்குப் பொருத்தமாக இருப்பதால் இந்த வசனம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 3) ஒன்பது மணிக்கு காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் 
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடனே, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாகி, வேலைக்காரன் படத்தில், எல்லோரும் இரவு பனிரெண்டு மணிக்கு விளக்கு போட்டு ஒற்றுமையை நிரூபியுங்கள் என்று சொன்ன காட்சியை ஒப்பிட்டு உற்சாகமாகப் பகிர்ந்துவருகிறார்கள்.

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், மோடியை சிவகார்த்திகேயனின் ரசிகர் என்று மீம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
 

Related Posts