சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 21 சூர்யாவின் புதியபட படப்பிடிப்பு – வணங்கான் நிலை என்ன?

சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியன இருக்கின்றன.

இவற்றில் வாடிவாசலுக்கு முன்பாக சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது.

இப்போது அதற்கும் முன்பாகவே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

ஆம், வணங்கான் படத்தை முடித்துவிட்டு சிறுத்தைசிவா படத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்த சூர்யா, இப்போது சிறுத்தை சிவா படத்தை முதலில் தொடங்கச் சொல்லிவிட்டாராம்.

தெலுங்குப்பட நிறுவனமான யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கவிருக்கும் அந்தப்படம், வரலாற்றுக் காலகட்டம் மற்றும் தற்போதைய காலகட்டம் என இருவேறு கதைக்களங்களைக் கொண்டிருக்கிறதாம்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

அப்படியானால் வணங்கான் என்னாச்சு?

அப்படத்தின் முழுமையான திரைக்கதை இன்னும் இறுதிவடிவம் பெறவில்லையாம். அதை முழுமையாக முடித்துக்கொண்டு படப்பிடிப்புக்குப் போகலாம் என பாலா, சூர்யா இருவரும் பேசி முடிவு செய்தார்களாம்.

சிறுத்தைசிவா படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts