Uncategorized சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்ற வெந்து தணிந்தது காடு – சிம்பு உற்சாகம்

கௌதம்மேனன் – ஏ.ஆர்.ரகுமான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

விண்ணைத் தாண்டி வருவாயா, ‘அச்சம் என்பது மடமையாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்தக் கூட்டணிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் வியாபாரமும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறதாம்.

இப்படத்தின் இந்தி உரிமை சுமார் பனிரெண்டு கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் இணையதள வெளியீட்டு உரிமையைப் பன்னாட்டு நிறுவனம் ஒன்று பெற்றிருப்பதாகவும் அதன் மதிப்பு சுமார் இருபத்துநான்கு கோடி என்றும் சொல்கிறார்கள்.

அதோடு இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விலை சுமார் பனிரெண்டு கோடி என்று சொல்லப்படுகிறது.

இம்மூன்று வியாபாரங்களிலேயே சுமார் நாற்பத்தெட்டு கோடி ரூபாய் கிடைத்திருக்கிறதென்பதால் இப்படம் இப்போதே பெரும் இலாபத்தில் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

இப்படம், மொத்தமாகவே இருபத்தெட்டு கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.

அப்படியென்றாலே பெரும் இலாபம், இன்னும் தமிழக திரையரங்கு உரிமை, மற்ற மொழி உரிமை ஆகியன இருப்பதால் மிகப்பெரும் இலாபத்தில் இப்படம் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.

இத்தகவல்களை அறிந்த சிம்பு மிகவும் உற்சாகமாக இருக்கிறாராம்.

Related Posts