சினிமா செய்திகள் நடிகர்

வடசென்னை படத்துக்கு சிம்பு திடீர் வாழ்த்து. எதனால்?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை.

இந்தப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்தப்படத்துக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.

அதில், இனிய நண்பர் தனுஷுக்கும் வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவினருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார்.

அதோடு எனக்கும் தனுஷுக்குமான போட்டி திரையில் மட்டும்தான். சமூகவலைதளங்களில் அல்ல எனவே என் ரசிகர்கள் நல்ல படங்களை ஆதரிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இன்று வடசென்னை வெளியாவதை ஒட்டி சிம்பு ரசிகர்கள் அந்தப்படத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவித்ததாகவும் அதனால் வடசென்னை படக்குழுவினர் கேட்டுக்கொண்டதன் பேரில் சிம்பு இச்செய்திக்குறிப்பை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts