October 29, 2020
சினிமா செய்திகள்

சிம்பு சுசீந்திரன் படத்தின் பெயர் இதுதான்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அக்டோபர் பத்தாம் தேதி சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.ஒவ்வொரு நாள் காலையிலும் ஏழுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிடுகிறார் என்றும் மாலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு தாமதமானாலும் இருந்து முடித்துக்கொடுத்துவிட்டுத் தான் அறைக்குச் செல்கிறாராம்.

சிம்பு படத்தின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் சனி, ஞாயிறுகளில் சென்னை வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த சிம்பு, இப்போது சென்னை வராமல் அங்கேயே தங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்.

இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப்படத்துக்கு, வாய்மையே வாகை சூடும் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts