சினிமா செய்திகள் நடிகர்

சிம்பு தனுஷ் படங்கள் போட்டா போட்டி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம்.

இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோரின் தோற்றங்களையும் படத்தில் அவர்களுடைய பாத்திரத்தின் பெயர்களையும், ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் அடுத்து சிம்புவின் தோற்றம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்திலும் இதே உத்தியைக் கடைபிடிக்கிறார்கள்.

வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் தோற்றமும் பெயரும் முதலி வெளியிடப்பட்டது. அடுத்து சமுத்திரக்கனியின் தோற்றமும் பெயரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படியே போய் கடைசியாக தனுஷின் தோற்றமும் பெயரும் வெளியிடப்படும்.

இயக்குநர்கள் இப்படிச் செய்யலாம் என்று முடிவு செய்து வெளியிட்டாலும் அப்படங்களில் சிம்புவும் தனுஷும் இருப்பதால் ரசிகர்களுக்குள் போட்டி மனப்பான்மை உருவாகும் சூழல் ஏற்படுகிறது.

அதைத்தான் அப்படக்குழுவினர் விரும்புகிறார்களோ என்னவோ?

Related Posts