December 8, 2019
சினிமா செய்திகள்

அன்று வேட்டைமன்னன் இன்று மகாமாநாடு – சிம்புவை வெறுப்பேற்றும் விமர்சனங்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்குவதாகச் சொல்லப்பட்ட படம் மாநாடு. இப்போது தொடங்குவோம் அப்போது தொடங்குவோம் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசியில் அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் வேறு கதாநாயகனை வைத்து அப்படத்தை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள்.

இதனால் சிம்பு கடும் கோபமாகிவிட்டார் போலும். அதனால் இன்று திடீரென, சிம்பு நடிப்பில் மகாமாநாடு என்றொரு படத்தைத் தொடங்குவதாக இரண்டு வரி அறிவிப்பை மட்டும் வெளியிட்டிருக்கிறார் சிம்பு.

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு வேட்டையன் என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது.

படம் தொடங்குமுன்பே சிம்புவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தை நிறுத்தினார் லிங்குசாமி.

அதனால் க்டும் கோபமடைந்த சிம்பு, உடனே வேட்டை மன்னன் என்றொரு படத்தைத் தொடங்கினார். அப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கினார். ஆனால் இன்றுவரை அப்படம் வெளியாகவில்லை.

இப்போது மகாமாநாடு படத்தின் நிலை வேட்டை மன்னன் போல ஆகுமா? அல்லது இதுவாவது நடக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும். இவ்வாறு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Posts