Uncategorized

பாஜகவை எதிர்க்கும் சிம்பு – பட அறிவிப்பால் பரபரப்பு

2028 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிம்புவின் மாநாடு படம் தள்ளிப்போய், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தைத் தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன்பின், திடீர் திருப்பமாக கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்ததாலும் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதையடுத்து 2020 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து படத்தில் நடிகர் சிம்பு இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அதற்கான பெயரை ரசிகர்கள் அனுப்பலாம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்தார்.

அவ்வாறு வரும் பெயர்களில் ஒன்றைத் தேர்வு செய்து சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று சிம்புவின் பெயர் அடங்கிய படத்தின் புதிய போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார். அதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும்,  ‘தைரியத்தை விட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை’ என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பை சிம்பு ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

மேலும், தற்போதைய பாஜக ஆட்சியில் இந்திய அளவில் இஸ்லாமியர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிற நேரத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடிப்பதும் தைரியத்தைவிட பெரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று சொல்லியிருப்பதும் படத்தில் இருக்கும் அரசியலை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.


Related Posts