November 17, 2019
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த
படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.

கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரத்னவேல், இசை அனிருத்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கி நான்கு நாட்கள் நடந்ததுடன் நின்றது.

அதன்பின் பல்வேறு தடைகளைத் தாண்டி, இப்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படம் முதலில் 2018 நவம்பரில் தொடங்கியதால், இந்தப்படத்துக்காக மூன்று பாடல்களை அப்போதே கொடுத்துவிட்டாராம் அனிருத்.

பத்துமாதங்கள் கழித்து இப்போது அந்தப்பாடல்களைக் கேட்டால் பழையது போல் தெரிகிறது. எனவே அவற்றை அப்படியே வைத்துவிட்டு புதிதாகப் பாடல்களை உருவாக்குங்கள் என்று இயக்குநர் ஷங்கர் சொல்லியிருக்கிறாராம்.

இதை எதிர்பார்க்காத அனிருத் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். எப்படியாவது பாட்டு கிடைச்சா போதும்ணு எல்லாரும் நெனப்பாங்க இவர் என்னடான்னா போட்டுக் கொடுத்த பாட்ட வேணாங்கறாரே என்று அனிருத் புலம்பிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts