சினிமா செய்திகள்

விஜய் அஜீத் தனுஷ் பற்றி ஷாருக்கான் கருத்து

இந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கான்.இவர் நடித்த இந்திப்படங்களான உயிரே, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்கள் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியானது.அதனால் தமிழக ரசிகர்களுக்கும் இவர் பரிச்சயம்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்கிற குறிச்சொல் போட்டு அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அதில் தமிழ்த் திரையுலக ரசிகர்களும் கலந்துகொண்டு விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் பற்றி கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ஷாரூக்கான் விஜய் அற்புதம், அஜித் எனது நண்பர், தனுஷ் நான் நேசிக்கும் நபர் என்று பதிலளித்திருந்தார்.

இதை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் தத்தம் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துவருகின்றனர்.

Related Posts