சினிமா செய்திகள்

சந்தானத்தின் பிறந்தநாள் பரிசு – கொண்டாடும் இரசிகர்கள்

அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்துவருகிறார்.. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 22 ஆம் தேதி கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தினர்.

இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் படக்குழு வெளீயிட்டுள்ளது.

அதன்படி இப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

சந்தானத்தின் பிறந்தநாள் பரிசாக வெளியாகியிருக்கும் இதை அவரது இரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

Related Posts