சினிமா செய்திகள்

சங்கத்தமிழன் பட வெளியீட்டில் சிக்கல்

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து  இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் சங்கத்தமிழன்.

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள  இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர்  நடித்துள்ளனர். 

மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தைத் தயாரித்துள்ளார்.
 
இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , படத்தொகுப்பினை பிரவீன் கே.எல்  மேற்கொண்டுள்ளார் .

இந்தப் படத்தின்  தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது .

இப்படம் இன்று (நவம்பர் 15)  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்தைத் தயரித்திருக்கும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தர வேண்டிய பழைய பாக்கிகள் உரிய முறையில் கொடுக்கப்படாததால் கடைசி நேரத்தில் படம் வெளியாகவில்லை.

இன்று மாலைக்குள் எல்லாச் சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

Related Posts