சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடி சாய்பல்லவி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது.

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதென்றும் தேதிகள் ஒத்துவந்தால் அவரே நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது.

நான்கு மாதங்களுக்குப் பின் இன்று மாலை (மே 9,2022) ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சிவகார்த்திகேயன் பட நாயகி சாய்பல்லவி என்று சொல்லும் விதமாக, கமல், சாய்பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, திறமையான கலைஞரை வரவேற்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts