விஜய் 65 படம் பற்றிப் பரவும் செய்தி
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தளபதி 64 என அழைக்கப்படும் இப்ப்டத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து,விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.
விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 64’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
உறுதிப்படுத்தப்படாத இச்செய்தி வேகமாகப் பரவிவருகிறது.