December 8, 2019
சினிமா செய்திகள்

ரஜினி படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகும் என்று சொல்லப்பட்டது.

இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 12) இயக்குநர் சிவாவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியோடு, சூர்யா இயக்குநர் சிவா ஆகியோர் இணையும் சூர்யா 39 ஆவது படக்குழுவினர் பற்றிய அற்விப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதன்மூலம் சிவா அடுத்து இயக்குவது சூர்யா படம்தான் ரஜினி படம் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Related Posts