செய்திக் குறிப்புகள்

லாரன்ஸ் நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் “ருத்ரன்”.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் முதன்முறையாக தயாரித்து இயக்குகிறார்.

கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“ருத்ரன்” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

Related Posts