Uncategorized சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த பட வேலைகளில் சுணக்கம் ஏன்?

ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் உறுதியாகிவிட்டதாகச் சொல்லப்பட்டது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி என்றும்
இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.ஆனால் அதற்கு முன்பே அப்படம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

என்ன சிக்கல்?

ரஜினியிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிய பிறகு, அந்தக்கதையைப் படமாக்க எவ்வளவு செலவாகும்? என்று உத்தேசமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தார்களாம்.

கதையில் முற்காலத்திய பகுதி (பீரியட்) இருப்பதாகவும் அதைப்படமாக்கப் பெரும் செலவு பிடிப்பதாகவும் தெரிந்திருக்கிறது. அதாவது ரஜினி சம்பளம் இல்லாமல் சுமார் நூறிலிருந்து நூற்றுப்பத்து கோடி வரை செலவாகும் என்று இயக்குநர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.

அந்தச்செல்வோடு ரஜினி சம்பளத்தையும் சேர்த்துப்பார்த்தால் பெரிய தொகை வருகிறது.

அந்த அளவுக்கு வியாபாரம் இல்லை, இந்தக்கணக்கில் படம் எடுத்தால் வெளியிடும்போது நட்டத்தில்தான் வெளியிடவேண்டும் என்கிற நிலையாம்.

இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மட்டுமின்றி வேறு எந்த நிறுவனமும் இதற்கு ஒப்புக்கொள்ளாது.

இந்நிலையில், ஒன்று ரஜினி தன் சம்பளத்தைக் குறைக்கவேண்டும் அல்லது கதையை மாற்ற வேண்டும் அல்லது இய்க்குநரையே மாற்றிவிட்டு வேறொருவரை நியமிக்கவேண்டும் எனும் நிலை.

அதனால், இந்தப்படத்தைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள் அண்ணாத்த வெளீயீட்டுக்குப் பிறகு முடிவு எடுக்கலாம் என்று ரஜினி சொல்லியிருப்பதாகத் தகவல்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்?

Related Posts